இலங்கை

இன்றைய வானிலை!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரண காலநிலை நிலவுமென தெரிவித்துள்ளது. மத்திய , வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் (30-40) கிலோமீற்றர் வேகத்தில் இருக்கும்.

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக கடல் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கு நோக்கி காற்று வீசும். இதன்போது காற்றின் வேகம் (30-40) கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், நீர்கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும் கடலலையின் வேகம் அதிகரித்து காணப்படும்.

எனவே மீனவர்கள் மற்றும் கடலோடிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நல்லூர் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Pagetamil

வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்!

Pagetamil

அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!