விளையாட்டு

இங்கிலாந்துடனான 2வது டெஸ்டில் இருந்து வில்லியம்சன் விலகல்!

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி, இங்கிலாந்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்த நிலையில், இடது கை மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டாம் லாதம் கேப்டனாக பணியாற்ற உள்ளார். மேலும், வில்லியம்சனுக்கு பதிலாக வில் யங் சேர்க்கப்ப்டடுள்ளது.

வரும் 18ம்  திகதி இந்தியாவுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி மோத உள்ள நிலையில், அதற்கு ஆயத்தமாகும் விதமாக, சிகிச்சை பெற்று ஓய்வு எடுக்க வில்லியம்சனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வாஸ், உதானவிற்கு தொற்று இல்லை: திட்டமிட்டபடி இன்று ஒருநாள் தொடர் ஆரம்பிக்கிறது!

Pagetamil

இறுதிக்கட்டத்தில் ஒலிம்பிக்: சீனா முதலிடத்தில்!

Pagetamil

இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்த அவுஸ்திரேலியா;கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் எனஉத்தரவு!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!