புராணக்கதைகளில் ராஜாக்களுக்கு அதிகமான மனைவிகள் இருந்தார்கள், அவர்களுக்கு அதிகமான குழந்தைகள் இருந்தார்கள் என்று எல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் உண்மையில் ஒருவர் ஒரு மனைவியிடம் படும் பாடே மிகப்பெரியதாக இருக்கும் நிலையில் இங்கு ஒருவர் தனது 37 வது திருமணத்தை நடத்தியிருக்கிறார். அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் இந்த திருமணத்தை அவர் செய்துள்ளார்.
இது குறித்து ரூபர் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் முதியவர் ஒருவருக்கு இளம் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. அந்த வீடியோ பதிவிடும் போது அவர் அதில் “தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த திருமணம் எங்கு நடந்தது? இந்த திருமணத்தை செய்தது யார்? இதில் குறிப்பிட்டிருப்பது உண்மை தானா என்ற விபரங்கள் தெரியவில்லை. ஐபிஎஸ் அதிகாரி இந்த வீடியோவை ஷேர் செய்து இவ்வாறுகுறிப்பிட்டதால் இது உண்மை என பலர் நம்புகின்றனர். ஆனால் இந்த திருமணத்திற்கு இந்த வீடியோவை தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
BRAVEST MAN….. LIVING
37th marriage in front of 28 wives, 135 children and 126 grandchildren.👇👇 pic.twitter.com/DGyx4wBkHY
— Rupin Sharma IPS (@rupin1992) June 6, 2021
இந்த வீடியோவை பலர் பகிர்ந்து, கருத்திட்டு வைரலாக்கி வருகின்றனர். பலர் இப்படி ஒர திருமணம் நடந்ததாக தன்னால் நம்பமுடியவில்லை எனவும் கருத்திட்டுள்ளனர்.