‘நவரசா’ படத்தின் ரிலீஸ் திகதி அப்டேட் வெளியாகி இருப்பதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
ஹாலிவுட்டை அடுத்து இந்தியாவிலும் அந்தாலஜி ட்ரெண்ட் சூடு பிடித்து வருகிறது. கோலிவுட் கூட இதற்கு விதிவிலக்கல்ல. புத்தம் புது காலை, குட்டி ஸ்டோரி, பாவக் கதைகள் என வரிசையாக பல அந்தாலஜி படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது தமிழ் சினிமாவின் 9 முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் 9 வெவ்வேறு கதைகளைக் கொண்ட நவரசா என்ற பிரம்மாண்ட அந்தாலஜி திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. இந்த வெப் சீரிஸை மணிரத்னம் தயாரித்து வருகிறார்.
கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், அரவிந்த் சுவாமி உள்ளிட்ட 9 இயக்குனர்களும், சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர். கோலிவுட்டின் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களும் இணைந்துள்ளதால் இந்த வெப் சீரிஸுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நவரசா அந்தாலஜி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நவரசா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 6-ம் தேடி வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சூர்யா ரசிகர்கள் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.