தற்போது ஒரு பார்ட்னருடன் உறவு கொள்ளும்போது நம்பிக்கைத் தன்மை மிகவும் அவசியம். உங்களது பார்ட்னர் உங்களிடம் அன்பு உள்ளவராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன.
உறவுகளில் கஷ்டமான நேரங்கள் ஏற்படுவது இயற்கையானது. பணிச்சுமை, பிஸி, பாதுகாப்பின்மை, நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூட உறவுகளில் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் இந்த பிரச்சினைகளை நாம் கையாளும் விதமும், அதே நேரத்தில் நம் பார்ட்னருடன் பழகும் முறையும் ஒரு உறவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. இதுபோன்ற காலங்களில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அது உங்களுக்கான சோதனை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கடினமான நேரங்களில் உண்மையிலேயே நம்பகமான பார்ட்னர் யார் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
உணர்வுகளுக்கு நேர்மையாக இருக்க ஊக்குவிப்பார்
உறவுகளில் பிரச்சினையின் போது பதற்றம் அதிகரிப்பதை தடுக்க ஒருவருக்கு ஒருவர் எப்படி சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நம்முடன் நீண்ட கால உறவை பேண வேண்டும் என்று நினைக்கும் ஒரு நபர் பிரச்சினைகளின் போது ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுப்பார். ஒரு சில முடிவுகள் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக எடுக்கப்படும் முடிவுகள் பற்றி இருவரும் உணர முடியும்
உங்களுடன் இணைந்து செயலாற்றுவர்
உங்கள் பார்ட்னர் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது, கடினமான சந்தர்ப்பங்களில் முற்றிலும் மாறுபட்ட நபராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் உங்களை நேசிக்கும் ஒருவருடன் நீங்கள் இருந்தால் உங்களது தகவல் தொடர்பு சீராக இருக்கும். இருவரும் இணைந்து முடிவெடுக்கும் ஒரு முயற்சியை உங்கள் பார்ட்னர் மேற்கொள்வார்
அன்பு
உங்கள் பார்ட்னர் உங்களுடன் நம்பிக்கையுடனும், அன்புடனும் இருக்கும் போது உங்களது உறவில் மோசமான ஒரு நிகழ்வு ஏற்பட வழி வகுக்க மாட்டார்கள். அல்லது உங்களை பழிவாங்க நினைக்க மாட்டார்கள். அன்புடன் உங்களை வழிநடத்துவார்.
அவரது உணர்வுகளை ஒதுக்கி உங்களது கருத்துக்கு மதிப்பளிப்பர்
நம்பிக்கையுடனான ஒரு பார்ட்னருக்கு எப்போது பேசவேண்டும் எப்போது கேட்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். அவரது சொந்த பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் சொல்வதை கேட்கும் திறன் கொண்டவராக இருப்பார். நீங்களிருவரும் உணர்வுபூர்வமாக இணையவும் உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தவும் இது போன்ற நிகழ்வுகள் உதவுகிறது.
பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருவர்
நீண்ட கால உறவை விரும்பும் ஒருவர் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு இடம் கொடுத்து உறவை முறித்துக் கொள்ள விரும்ப மாட்டார். பிரச்சினைகள் உறவின் ஒரு பகுதி என்பதை அவர் உணர்ந்து அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வார்.
உங்களுக்காக இருக்கிறேன் என்பதை நினைவு படுத்துவார்
ஒருவர் உங்களுக்காக இருப்பேன் என்று கூறினால், அவர் உங்கள் உறவில் எந்த ஒரு பிரச்சனையிலும் உங்களுடன் இருப்பார் என்று அர்த்தம். மேலும் செயல்களால் இதை அவர்கள் நிரூபிப்பார்கள்.