26.4 C
Jaffna
March 29, 2024
லைவ் ஸ்டைல்

முட்டை அதிகப்படியான சத்துக்களை கொண்டுள்ளது என உங்களுக்கு தெரியுமா?

அனைவரும் சாதாரணமாக தினசரி உணவில் எடுத்துக்கொள்ள கூடிய ஒரு உணவாக முட்டை உள்ளது. ஆனால் நாம் அறிந்ததை விடவும் முட்டை அதிகப்படியான சத்துக்களை கொண்டுள்ளது என உங்களுக்கு தெரியுமா? முட்டை பலவகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதனால் அது சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. எனவே முட்டையை குறித்த சுவாரஸ்யமான 5 உண்மைகளை இப்போது பார்ப்போம்.

உணவு கலாச்சாரத்தில் முட்டை ஒரு முக்கியமான உணவாக உள்ளது. முட்டை 13 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் இது தாதுக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளது.

கண் ஆரோக்கியத்திற்கு உதவுவது முதல் தசைகளின் வளர்ச்சி வரை உடலின் பல செயல்ப்பாடுகளுக்கு முக்கியமான உணவாக முட்டை உள்ளது. அப்படிப்பட்ட முட்டை குறித்த 5 வியப்பூட்டும் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்ப்போம்.

​அதிகபட்ச ஊட்டச்சத்துக்கள்

புரதங்கள் அதிகமாக இருப்பதையும் விட முட்டைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. இதில் வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட், ரைபோஃப்ளேவின் (வைட்டமின் பி2) போன்ற தாதுக்கள் உள்ளன. மேலும் செலினியம், வைட்டமின் ஏ, ஈ, பி 5, பி12, அதோடு இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் இருப்பதால் அதிக ஊட்டச்சத்து கொண்ட ஒரு உணவாக முட்டை உள்ளது.

இந்த காரணிகள் காரணமாக இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

​ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன

egg diet: வேக வைத்த முட்டை டயட்டா? அதுல இவ்ளோ வேகமா எடை குறைக்கலாமா? - weight loss with boiled egg diet you need to know the following methods | Samayam Tamil

முட்டை மிக உயர்ந்த தரத்தில் புரதத்தை வழங்குகின்றன. மேலும் இவை ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டுள்ளன.

அவை உடலின் வளர்ச்சி மற்றும் தசை பராமரிப்பிற்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றன. கூடுதலாக முட்டைகள் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதங்களை அதிகரிக்க உதவுகின்றன. இவை பொதுவாக நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகின்றன.

இந்த நல்ல கொழுப்புகள் இதய நோய் தொடர்பான அபாயங்களை குறைக்க உதவுகின்றன. மேலும் முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ, துத்தநாகம் மற்றும் புரதம் நிறைந்து உள்ளன. அவை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.

​எடையை நிர்வகிக்கிறது

உங்களுக்கு முட்டையின் சுவை பிடித்திருக்கலாம். நீங்கள் அதை ரசித்து உண்ணும்போது உங்கள் உடலில் லெப்டின் என்ற ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் அதிக நேரம் உங்கள் வயிறு திருப்தியாக உள்ளதாக உணர்வீர்கள். இதனால் அதிக நேரத்திற்கு உணவு உண்ணமாட்டீர்கள். மேலும் உணவானது வயிற்றை விட்டு வெளியேறும் விகிதத்தையும் இது தாமதப்படுத்துகிறது.

முட்டை குறைந்த அளவில் கலோரிகளை கொண்டுள்ளது. ஒரு முட்டை 75 முதல் 78 வரை கலோரிகளை கொண்டுள்ளது. இதனால் முட்டை எடை குறைப்பிற்கும் எடையை சரியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மேலும் இது உங்கள் உடலில் ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது.

​முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

முட்டை புரதம் அதிகம் நிறைந்த சூப்பர் ஃபுட் ஆகும். நம் உடல் வலிமைக்கு மட்டுமல்ல. நம் தலைமுடிக்கும் இது பல விதமான நன்மைகளை செய்கிறது. முட்டைகளில் அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அத்துடன் செலினியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

முட்டையின் மஞ்சள் கருவில் லெசித்தின் உள்ளது. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு முடியை மென்மையாக்குவதற்கும் உதவுகிறது. மேலும் இவை முடி உடைதல் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றன.

​சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

15 நாட்களில் வெள்ளையாக எளிய வழி…

 

முட்டையின் வெள்ளை கருவில் புரத சத்து உள்ளது. இது சருமத்திற்கு நன்மை செய்கிறது. இது முக பிரச்சனைகளை சரி செய்கிறது. முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் முகப்படுக்களை இது சரி செய்கிறது. முட்டைகள் சருமத்தை மென்மையாக்கவும் ஹைட்ரேட் செய்யவும் மற்றும் நிறமாற்றம் ஏற்படுவதில் இருந்து பாதுக்காக்கவும் உதவுகின்றன

மேலும் முட்டைகளில் லுடின் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளன. அவை கோடுகள் மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் புற ஊதா கதிர்களுக்குக் எதிராக செயல்ப்பட்டு சருமத்தை பாதுக்காக்கின்றன.

எனவே பெண்கள் ஆண்கள் இருவருக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை வழங்க கூடிய ஒரு எளிமையான உணவாக முட்டை உள்ளது. தினசரி உணவில் முட்டையை சேர்ப்பது மூலம் நாம் பல்வேறு பயன்களை அடைய முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment