தமிழக ஆந்திர எல்லையில் உள்ள மதுபானக்கடையில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே போல உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக மாநில அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இதில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில சரக்கு வாங்கி சட்டவிரோத விற்பனையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக மதுப்பிரியர்கள் திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஆந்திர மதுபானக்கடையில் குவிந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மதுபான கடையில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்pic.twitter.com/w6Hl24PjwY
— Don Updates (@Don_Updatez) June 6, 2021
சிலர் தமிழகத்தில் விற்பனை செய்யவே மதுபானம் வாங்க குவிந்தனர். ஆந்திர எல்லையில் உள்ள மதுபானக்கைடயில் இரு மாநில மதுப்பிரியர்களும் குவிந்ததால் கோவில் திருவிழா போல காட்சியளித்தது.