இலங்கை

வீட்டில் முடங்கியிருந்த விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞன்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் பயணத்தடை காரணமாக வீட்டில் முடங்கியிருந்தமையால் உயிரை மாய்த்த அதிரச்சி சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதிரியை சேர்ந்த கோபாலசிங்கம் மயூரதன் (36)  என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

வெளிநாட்டில் தங்கியிருந்த நிலையில் சில காலமாக அவர் நாட்டுக்கு திரும்பியிருந்தார். எதிர்பாராத பண இழப்புக்களினால் மனரீதியாக பாதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று மாலை தனது தாயாரிடம் பீடிக்கு பணம் கேட்டுள்ளார். தற்போது கடைகள் திறக்கவில்லை, மாலை கடைகள் திறந்த பின்னர் வாங்கலாம் என தாயார் கூறியுள்ளார். அதன்பின்னர், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடல் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

அவரது குடும்பத்தினர் சாட்சியமளிக்கையில், அவர் இதனால் தினமும் ஆலயங்கள், வெளியிடங்கள் என மாவட்டம், மாவட்டமாக மோட்டார் சைக்கிளில் திரிபவர்.

இரண்டு வாரங்களாக பயணத்தடையால் வீட்டில் முடங்கியிருந்தமையினால் மிக விரக்தியாக இருந்தார். வெளியில் நடமாட முடியாத நிலையில், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வந்தார். நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4
+1
9

Related posts

வைரஸை அழிக்கும் முகக்கவசத்தை அறிமுகம் செய்த பேராதெனிய பல்கலைகழகம்!

Pagetamil

யாழ் பல்கலைகழகத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Pagetamil

தமிழரின் நில, அரசியல் உரிமை மீட்பு பற்றிய சர்வதேச மாநாடு: நவிப்பிள்ளை, ரொனி பிளேயரின் மனைவி பங்கேற்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!