25.5 C
Jaffna
December 1, 2023
சினிமா

‘பிரேமம்’ மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக சாய் பல்லவி நடித்துள்ள நிலையில், அதில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து `பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட ‘பிரேமம்’ படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், தங்களது மலையாள படங்களில் தமிழின் தாக்கம் இருப்பது பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் பதிலளித்ததாவது: “முதலில் நான் பிரேமம் கதை எழுதிய போது மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க விரும்பினேன். அந்தக் கதையும் மலையாளத்தில் தான் இருந்தது. ஃபோர்ட் கொச்சியை சேர்ந்தவராக அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து இருந்தேன்.

பின்னர் அசினை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராக மாற்றி எழுதினேன். நான் சிறு வயதில் ஊட்டியில் படித்தேன் பின்னர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தேன். அதனால் தான் எனது படத்தில் தமிழின் தாக்கம் அதிகமாக இருக்கிறது” என விளக்கம் அளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இந்த சீனெல்லாம் வேணாம்.. ஒத்தபைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும்’: சமுத்திரக்கனி எச்சரிக்கை

Pagetamil

‘ஞானவேல்ராஜாவின் பின்னால் சிவகுமார் குடும்பம்’: கரு.பழனியப்பன்

Pagetamil

‘பருத்திவீரன்’ பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

Pagetamil

‘என் போன்றோரையும் அவமதிக்கும் செயல்’: அமீர் விவகாரத்தில் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

Pagetamil

2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கிறார் சமந்தா?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!