இலங்கை

மேலும் பல பகுதிகளிற்கு வெள்ள எச்சரிக்கை!

ஓஹா ஓயாவை அண்டிய தாழ்வான பகுதிகளான அலவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வெண்ணப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கிறது.

மகா ஓயா படுகையின் மேல், நடுத்தர, கீழ் மற்றும் கீழ் நீரோடைப் பகுதிகளில் இதுவரை 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்தயைடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரியுல்ல- குருநாகல் பிரதான சாலையில் உள்ள கிரியுல்ல காவல் நிலையம் வரும் மணிநேரங்களில் வெள்ளத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அது கூறியது.

அத்துடன், களனி கங்கைக்கு அருகாமையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலமை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெஹிஓவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்போ, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தள ஆகிய பகுதிகளில் இவ்வாறு வௌ்ள நிலமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் வசிக்கு மக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil

வவுனியா இலுப்பையடியிலும் குடியமர்ந்த புத்தர்

Pagetamil

குடிமக்களிற்கு நாளை முதல் கொண்டாட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!