26.8 C
Jaffna
January 21, 2022
இந்தியா தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பரிசை வென்ற 15 வயது இந்திய வம்சாவளி சிறுமி!

இந்த ஆண்டு “Swift Student Challenge” போட்டியில் வென்ற 350 வெற்றியாளர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபினயா தினேஷ் எனும் 15 வயதான சிறுமியும் ஒருவர் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த “Swift Student Challenge” போட்டி என்பது ஆப்பிளின் வருடாந்திர WWDC இன் ஒரு பகுதியாகும். இந்த போட்டியில் குழந்தைகள் தங்கள் coding திறனை வெளிப்படுத்தி பரிசை வெல்வர்.

ஆப்பிள், தனது செய்தி அறிவிப்பில், 15 வயதான அபிநயா தினேஷ் ‘மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் இணைப்பு’ பிரிவில் எவ்வளவு ஆர்வமாக உள்ளார் என்பதை விவரித்துள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள நார்த் பிரன்சுவிக் நகரில் வசிக்கும் இவருக்கு கடந்த ஆண்டு pelvic foot disorder எனும் இடுப்பு கால் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

“நான் ஒரு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்டிடம் (gastroenterologist) சென்றேன், அவர் என்னை இடுப்பு கால் கோளாறு இருப்பதை கண்டறிந்தார், ஆனால் அதிலிருந்து நான் எப்படி குணமடைய முடியும் என்று என்னிடம் எதுவும் சொல்லவில்லை,” என்று அபிநயா கூறினார்.

அதையடுத்து, அபிநயா Gastro at Home என்ற பயன்பாட்டை உருவாக்கினார். இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு அந்நோய் குறித்த தகவல் மற்றும் ஆதாரங்களை அணுகுவதற்கான வழியை இந்த பயன்பாடு வழங்குகிறது, குறிப்பாக மக்கள் பேசுவதற்கு தயங்கும் சில தகவல்களைப் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ஆப் ஸ்டோரில் இந்த பயன்பாட்டை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதோடு மட்டும் நில்லாமல், அபிநயா தனது சொந்த இலாப நோக்கற்ற இம்பாக்ட் AI (Impact AI) என்ற நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார், இது இளைஞர்களிடையே (AI) கற்றல் மற்றும் நெறிமுறை நடைமுறைகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. இம்பாக்ட் AI மூலம், இளம் பெண்களுக்கு coding மற்றும் maching learning அடிப்படைகளை கற்பிப்பதற்காக எட்டு வார உயர்நிலைப்பள்ளி திட்டங்களையும் அவர் தொடங்கினார்.

இது குறித்து அபிநயா கூறுகையில், “எனக்கு கற்பிப்பதில் ஆர்வம் அதிகம். இந்த தொழில்நுட்பம் உள்ளது என்பதையும் மருத்துவம் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்களுக்கு இவை வழிவகுக்கும் என்பதையும் அடுத்த தலைமுறையினருக்குக் காண்பிப்பது மிகவும் முக்கியமானது.” என்று தெரிவித்தார்.

அபிநயா தனது உயர்நிலைப் பள்ளி பட்டப்படிப்புக்குப் பிறகு மருத்துவம் அல்லது கணினி அறிவியலில் பட்டம் பெற விரும்புவதாகவும் தெரிவித்தார். மருத்துவத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதே அவரது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொரோனா பாடல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறை!

divya divya

நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையிடம் சிக்கிய இலங்கையர்கள்: கடத்தலிற்கு முயன்றனரா?

Pagetamil

கரடியை கையால் விரட்டிய பெண்- வைரலாகும் வீடியோ!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!