நடிகை அமிர்தா ஐயர் தனது முதல் டோஸ் கொரானா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
‘பிகில்’ படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை அமிர்தா ஐயர். தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது பிக்பாஸ் கவின் நடிப்பில் உருவாகி வரும் ‘லிப்ட்’ படத்தில் நடித்துள்ளார். வினித் வரபிரசாத் இயக்கி வரும் இப்படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இதற்கிடையே கொரானாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு வேகமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்களோடு இணைந்து சினிமா பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றன. இதோடு சமூக விழிப்புணர்வையும் நடிகர், நடிகைகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை அமிர்தா ஐயர் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.