வியட்நாம் நாட்டில் பெண் ஒருவர் பாம்பை வெறும் கையால் பிடித்து தூக்கி செல்லும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த தகல்வகளை முழுமையாக காணுங்கள்.
இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் பதறிப்போவார்கள்
கொஞ்சம் பதட்டமடைபவர்கள், இளகிய மனது படைத்தவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் அதிர்ச்சியான விஷயங்களை கேட்டாலே படபடப்பு ஏற்பட்டு விடும். அவர்கள் மிக அதிர்ச்சியான விஷயங்களை பார்த்தால் அவ்வளவு தான் மயங்கியே விழுந்து விடுவார்கள் அவர்கள் தற்போது சமூகவலைத்தங்களில் டிரெண்டாகி வரும் வீடியோவை பார்த்தால் அவ்வளவு தான் அதற்காக தான் தலைப்பு அப்படி கொடுத்துள்ளோம்.
சரி விஷயத்திற்கு வருவோம் சமீபத்தில் வியட்நாம் நாட்டில் சாலையில் தன் மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தவர் பார்த்த ஒருவிஷத்தை தன் செல்போனில் வீடியோவாக எடுத்து அதை பதிவிட்டுள்ளார். இது தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவர்கள் சாலையில் செல்லும் போது சாலை ஓரத்தில் பைக்கில் வந்த ஒரு பெண் சாலையில் கிடந்த பாம்பை கையில் தூக்கிக்கொண்டு செல்கிறார். பாம்பு அவரின் பிடியிலிருந்து விடுபட பல முயற்சிகளை செய்கிறது. வெறும் 48 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.