லைவ் ஸ்டைல்

நீங்கள் இரவில் தவறாமல் வாழைப்பழம் சாப்பிடுபவரா? ஆனால் அது நல்லதா?

நகரங்கள் ஆனாலும் சரி கிராமங்கள் ஆனாலும் சரி, பெரும்பாலோர் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அப்படி சாப்பிடுவது நல்லதா என்று கேட்டால்… ஒன்று அல்லது இரண்டு பழங்களை சாப்பிடும் வரை நல்லது தான். அதற்கும் மேல் சாப்பிட்டால் நல்லதல்ல என்கிறது ஆயுர்வேதம். அதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

வாழைப்பழம் உடலுக்குத் தேவையை அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை எல்லாம் வழங்குகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை பிரச்சினை இருப்பவர்கள் இதை கண்டிப்பாக சாப்பிடலாம். உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடலாம்.

ஆனால், இரவு நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிடும் போது சளி பிடிக்கும் ஆபத்து உள்ளதாக ஆயுர்வேதம் சொல்கிறது. எனவே இரவு நேரங்களில் வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.

அதே போல வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்தும் அதிகம் இருப்பதால் நரம்புமண்டலத்தில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது. அதே போல இந்த பழத்தைச் சாப்பிடுவதால் மனநிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனம் சாந்தப்படும்.

சாதாரணமாக ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் இருக்கும். உடல் எடை குறைப்பவர்கள் 500 கலோரிகளுக்கும் குறைவாக சாப்பிட விரும்பினால் வாழைப்பழத்தோடு ஒரு கப் பால் மட்டும் குடிக்கலாம்.

அதே போல இரவு நேரத்தில் காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற சிக்கல் எல்லாம் ஏற்படாமல் இருக்கும்.

சுவாசம் சம்பந்தமான பிரச்சினை இருப்பவர்கள் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கசக்கும் பாகற்காயின் இனிப்பான தகவல்கள்!

divya divya

இளமையாகவும் அழகாகவும் இருக்க ஆசையா? நீராவி வைத்தியம் இருக்கு!

divya divya

தெரிந்து கொள்ளுங்கள்! உடற்பயிற்சி செய்தபின் எவ்வளவு நேரத்தில் குளிக்க வேண்டும்.

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!