தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வந்த புகாரை அடுத்து பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர் புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதில் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னையில் கெபிராஜ் என்பவர் நடத்தி வந்த தற்காப்பு பயிற்சியகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் போது பயிற்சியாளர் கெபிராஜ் காரில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஒத்துழைப்பு தராததால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1