26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
ஆன்மிகம்

இந்த மூன்று ஜோடி ராசி தம்பதிகள் தங்கள் உறவில் மோதல் போக்குடன் இருப்பார்கள்!

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இரு நபர்களுக்கிடையே பிரச்னை, மோதல் ஏற்படும் போது, அதை உறவினர் விலக்கி பிரச்னையை தீர்த்து வைப்பது வழக்கம். ஆனால் கீழே குறிப்பிட்ட சில ராசி ஜோடிகள் திருமணத்திற்கு பின்னர் தங்களின் உறவினர்களுடன் எப்போதும் ஒட்டுவதில்லை.

திருமணம் ஒருவரின் வாழ்க்கையில் புது உறவை தேடித் தருவது மட்டுமில்லாமல், இரு குடும்பம் சேரக்கூடிய மிக முக்கிய நிகழ்வு திருமணத்தின் மூலம் நிகழ்கிறது.அதனால் தான் திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இரு நபர்களுக்கிடையே பிரச்னை, மோதல் ஏற்படும் போது, அதை உறவினர் விலக்கி பிரச்னையை தீர்த்து வைப்பது வழக்கம்.

ஆனால் கீழே குறிப்பிட்ட சில ராசி ஜோடிகள் திருமணத்திற்கு பின்னர் தங்களின் உறவினர்களுடன் எப்போதும் ஒட்டுவதில்லை. அதாவது எப்போதும் மனக்கசப்பு, மோதல் போக்கை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். அந்த 3 ஜோடி ராசிகள் யார், அவர்கள் ஏன் முரண்பாடாக நடந்து கொள்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் மற்றும் கடகம்

கடக ராசியை சேர்ந்தவர்கள் தங்களின் மன நிலையை வீட்டு நபர்கள் கணிக்க முடியாத நபர்களாக இருப்பார்கள். அதே போல மேஷ ராசியினர் தைரியமானவர்கள், தன்னிச்சையானவர்கள் மற்றும் சில நேரங்களில் மிகவும் அப்பட்டமானவர்கள். அதாவது அப்பட்டமாக எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

கடக ராசியினர் அதிக தனிமையை விரும்பக்கூடியவர்களாக இருப்பர். அதனால் மேஷ ராசியினர் வெளிப்படையாக சில விஷயங்களை கேட்கும் போது இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம் மற்றும் தனுசு

ரிஷபம் ராசியினர் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை, ஸ்திரத்தன்மையை விரும்பக்கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கென ஒரு தனிவட்டத்தைப் போட்டுக் கொண்டு அவர்கள் அதற்குள் அவன் வாழ நினைக்கின்றனர். ஆனால் தனுசு ராசியினரோ அதற்கு அப்படியே எதிரானவர்கள். இவர்கள் மிகவும் சுதந்திரமாகவும், உற்சாகமாகவும் வாழ விரும்பக்கூடியவர்கள்.

ஒரு சிறிய இடத்தில் தங்க விரும்புவதில்லை.இந்த இரண்டு எதிரெதிர் குணம் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தும் போது மோதல் உருவாகின்றன.

மீனம் மற்றும் கன்னி

குருவை அதிபதியாக கொண்ட மீன ராசியினர் மற்றவர்களின் நோக்கம், விருப்பத்தை அறிந்து பச்சாதாபம் கொண்டு அதற்கேற்றார் போல வாழக்கூடியவர்கள். தங்களின் மனதை திறக்க விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.

கன்னி ராசியினரோ தங்களின் துணையின் மனதில் இருக்கும் விஷயத்தை வெளிக்கொண்டு வர முயல்வர். இது பல நேரங்களில் மோதலை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment