சினிமா

விஜய் சேதுபதியின் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” உருவான விதம்!

விஜய் சேதுபதி நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி வித்தியாசமாக நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ள இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக முன் தயாரான இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது ;ரகசிய இடத்தில் விசாரணை!

divya divya

ஓட்டல் அறையில் சினிமா உதவி இயக்குனர் தூக்குபோட்டு தற்கொலை

Pagetamil

மும்பையில் வீடு வாங்கும் சமந்தா!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!