26.3 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை கிழக்கு

கிழக்கில் கொவிட் சிகிச்சைக்காக முதலாவது ஆயுர்வேத – அலோபதி சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஒன்று திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை (28) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரனின் வழிகாட்டலின் கீழ் கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சனின் மேற்பார்வையில் குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

50 படுக்கைகளுடன் கூடிய இந்த சிகிச்சை நிலையத்தில் நேற்றைய தினமே 50 பெண் கொரோனா தொற்றாளர்கள் உட்பட சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் இன்று (29) தெரிவித்தார்

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

சவுதியில் உயிரிழந்த மூதூர் பெண்

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment