தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
முன்னதாக இம்மாதம் 31ம் திகதியும், ஜூன் 4ஆம் திகதியும் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த நாட்களிலும் கட்டுப்பாடு தளர்த்தப்படாது என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட சமயத்தில் பெருமளவானவர்கள் ஒன்றுகூடியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
4
+1
2
+1