லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
முதல் பாகத்தின் இறுதியில் 2-ம் பாகம் தொடங்கும் என குறிப்பிடபட்டிருந்தது . படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தியும் ‘கைதி 2’ கண்டிப்பாக உருவாகும் என்று உறுதிப்படுத்தினார்.
ஆனால் அதன்பின் அதற்கான பேச்சுவார்த்தை ஏதுமில்லை . இதனிடையே, ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேஸ் பக்கத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கலந்துகொண்டார்.
அதில் ‘கைதி 2’ குறித்த கேள்விக்கு எஸ்.ஆர்.பிரபு, “கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக ‘கைதி 2’ உருவாகும்” என்று குறிப்பிட்டார்.