25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
ஆன்மிகம்

எந்த ராசிகளுக்கு அழகான மனைவி / கணவன் கிடைப்பார்கள் தெரியுமா?

ஜோதிடத்தின் அடிப்படையில் எந்த ராசிகளுக்கு மிகவும் அழகான, அறிவான மற்றும் அன்பான மனைவியோ, கணவனோ அமைவார்கள் என்பதை ஒருவரின் ஜனன கால ஜாதக கிரக நிலையைப் பொறுத்து விரிவாக பார்ப்போம்.

நம் வாழ்வின் புதிய அத்தியாயத்தை நம்முடைய திருமண வாழ்விலிருந்து தொடங்குகிறது என சொல்லலாம். திருமணம் என்ற பேச்சு எடுத்ததும் ஜாதக பொருத்தம் சரியாக இருக்க வேண்டும், அதையும் விட முக்கியமானதாக அன்பான, பாசமான, அறிவான பெண் மனைவியாக அமைய வேண்டும் என ஆண்கள் நினைப்பதுண்டு. அதே போல் பெண்களும் நினைப்பதுண்டு.

அப்படிப்பட்ட திருமணம் பலருக்கு கனவாக இருக்கிறது. சிலர் கொடுமை என கூறுவதும் உண்டு. 90’s கிட்ஸ்க்கு தனக்கு திருமணம் ஆகுமா இல்லையா என்ற ஏக்கம் எப்போதும் நிறைந்திருக்கும்.அப்படி இருக்க யாருக்கெல்லாம் அழகான மனைவி அவர்களின் ஜாதக கட்டப்படி அமையும் என்பதை இங்கு பார்ப்போம்.

அன்பு, அறிவு, அழகு ஆகிய மூன்றும் ஒருங்கே சேர்ந்த பெண் மனைவி அல்லது கணவன் அமையப்பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் அது சாத்தியமற்றது. அழகான மனைவி பெரும்பாலும் அழகை ரசிக்க தெரியாதவனுக்கே அமைகிறது.

திருமண பந்தத்தை தீர்மானிப்பது ஜாதகத்தின் 7ம் இடம் தான். அந்த இடத்தில் அமைந்திருக்கும் கிரகத்தைப் பொருத்தும், சுக்கிரன் அமைந்திருக்கும் நிலையைப் பொறுத்து திருமண பாக்கியம், திருமண இன்பம் கிடைக்கும்.

அதிலும் குறிப்பாக ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சுப கிரகங்கள் இருப்பதும், குரு, சுக்கிரன், புதன் வளர்பிறை சந்திரன் போன்றவை அமைந்திருக்கும் பட்சத்தில், அசுப கிரகங்கள் இல்லாமல் இருந்தால் நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உங்களுக்கு அழகான அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளது.

ரிஷபம் மற்றும் துலாம் ராசி களத்திர காரகன் சுக்கிரனையே ராசி நாதனாக கொண்டவர்கள் ரிஷபம் மற்றும் துலாம் ராசியினர் இந்த உலகத்தை அனுபவிக்கப் பிறந்தவர்கள். இவர்களுக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து இன்பத்தையும் பெற கூடியவர்கள் என்றால் மிகையாகாது. ருசியான உணவுகளை சுவைப்பவராகவும். எதிலும் சுத்தமாக இருக்க விரும்புபவர்கள் துலாம் ராசியினர்.

குறிப்பாக இவர்கள் துணையைத் தேர்வு செய்வதில் கில்லாடிகள். எதையும் ரசித்து செய்யக்கூடிய இவர்கள் துணையை தேவு செய்வதிலும் அதே போல செயல்படுவார்கள்.அதனால் இவர்களுக்கு அழகான மனைவி கிடைப்பது சாத்தியமே.

தனுசு துலாம், கடக ராசியினர் தன் எதிர் பாலினம் குறித்த விஷயங்களில் ஆராய்ச்சியாளர் போல செயல்படுவார்கள். இவர்கள் ரசனையுடையவர்களாகவும், புன்னகை பேசும் கண்கள் என அனைத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

மேஷம் விருச்சிகம், மகரம், கும்பம், சிம்ம ராசியினர் அவர்கள் போக்கில் இஷ்டப்பட்டு திருமணம் செய்வார்கள் என்பதை விட அவர்கள் பல கஷ்டங்கள், சோதனைகளுக்கு பின்னர் தான் அவர்களின் திருமணம் நடைபெறும் என்று கூறலாம்.

உங்களுக்கான திருமண யோக நேரம் வந்தால் அதாவது சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கு அழகான, வாழ்க்கை துணை மனைவியாக வர அதிகம் வாய்ப்புள்ளது. நல்ல வேலை, தொழிலில் இருந்தால் இவர்களுக்கு எல்லாம் சாதகமாக அமையும்.

ன்னி, மீனம், மிதுன ராசியினர் எப்போதும் எந்த விஷயமாக இருந்தாலும் அவர்கள் எதையும் கணக்கு போட்டு, திட்டம் போட்டு தான் செயலில் இறங்குவார்கள். அது இவர்கள் திருமணத்திற்கான துணையை தேடுவதிலும் தொடரும்.

இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். இவர்கள் திருமணம் செய்ய உள்ளவரின் குணாதிசயம், குடும்பம் எப்படி, அவரின் அறிவு, திறமை உள்ளிட்டவை தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

முக்கிய குறிப்பு :

இங்கு குறிப்பிட்டுள்ள யாவும் பொதுவாக ஜோதிட குறிப்புகளே. அவரவர் ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரக நிலை அடிப்படையில் தான் ஒருவருக்கு வாழ்க்கை துணை அமையும். அது தான் விதி என கூறலாம்.

அதோடு ஜாதகத்தில் 4ம் இடம் வலுத்தும், 7ம் இடத்தை சுப கிரகங்களின் பார்வை கொண்டவராக, குரு, சுக்கிரன் ஆகியவை வலிமையான நிலையில் இருக்கும் ஜாதகதாரருக்கு நல்ல அழகான மனைவி / கணவன் அமையும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment