திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது. மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் இன்றும் வேலைக்குச் சென்றனர்.
இவ்வாறு கொழுந்து மலைக்குச்சென்று கொழுந்து கொய்துவிட்டு, கொழுந்தின் அளவை, பொதுவெளியில் வைத்து அளவிடுகையிலேயே நண்பகல் 12 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதையடுத்து பாதிக்கப்பட்ட 17 ஆண் தொழிலாளர்களும் சுயநினைவை இழந்தனர் எனவும், அதிர்ச்சியால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
–க.கிஷாந்தன்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1