காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்தபோது அவரை வாழ்த்தி நடிகை அனுஷ்கா ட்வீட் செய்தார். அந்த ட்வீட்டுக்கு 7 மாதங்கள் கழித்து பதில் அளித்துள்ளார் காஜல். அதை பார்த்த ரசிகர்கள் காஜலை கிண்டல் செய்துள்ளனர்.
காஜல் அகர்வாலும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் காதலித்து வந்தனர். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் மும்பையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடந்தது.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. காஜலின் திருமண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் அனுஷ்கா.
காஜலின் திருமணம் முடிந்த மறுநாள் வாழ்த்தியிருந்தார் அனுஷ்கா. அந்த ட்வீட்டுக்கு காஜல் கடந்த 19ம் தேதி தான் பதில் அளித்திருக்கிறார்.
காஜலின் பதிலை பார்த்த அனுஷ்கா ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
இது தான் உங்க டக்கா காஜல்? வெறும் 7 மாதம் கழித்து பதில் அளித்துவிட்டீர்களே. எங்க ஸ்வீட்டிக்கே இப்படியா?. இருந்தாலும் பரவாயில்லை. நல்லா இருங்க.
பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கிளம்பிய பேச்சு இன்னும் அடங்கியபாடில்லை. பிரபாஸ் திருமணம் செய்து கொண்டால் அனுஷ்காவை தான் மணக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் ரசிகர்கள்.
துபாய் தொழில் அதிபருக்கு மனைவியாகப் போகும் அனுஷ்கா?
தானும், அனுஷ்காவும் காதலர்கள் இல்லை, நல்ல நண்பர்கள் மட்டுமே என்று பிரபாஸ் சொல்லியும் ரசிகர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் அனுஷ்காவுக்கும், துபாயை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அனுஷ்கா தரப்பு உறுதி செய்யவில்லை.
இதற்கிடையே அனுஷ்கா மீண்டும் வெயிட் போட்டு குண்டாகிவிட்டதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அனுஷ்காவின் ரசிகர்களோ, ஸ்வீட்டி எப்படி இருந்தாலும் அழகு தான் என்கிறார்கள்.
அனுஷ்கா மறுபடியும் குண்டாகிட்டாரே: வைரல் போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி
அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிசப்தம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் ஓடிடியில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தை பார்த்தவர்கள் கண்டமேனிக்கு விளாசிவிட்டனர்.