கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் ஷூட்டிங் நடத்த முடியாமல் திணறி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக லாக்டவுன் காரணமாக சீரியல் மற்றும் மற்ற ஷோக்களின் ஷூட்டிங் நடைபெறவில்லை. அதனால் தற்போதே பழைய நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்யும் நிலைக்கு டிவி சேனல்கள் அனைத்தும் தள்ளப்பட்டு உள்ளன.
தற்போது சன் டிவி அதன் முக்கிய சீரியல்கள் நேரத்தை மாற்றி உள்ளது. அதன் படி ரோஜா சீரியல் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதே நேரத்தில் தான் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே இந்த இரண்டு சீரியல்களுக்கு நடுவில் தான் டிஆர்பியில் போட்டி இருந்து வருகிறது. தற்போது இரண்டும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.
இனி உங்கள் அன்பான ரோஜா இரவு 9 மணிக்கு மலரப்போகிறாள்
Roja| Monday – Friday| 9 PM#SunTV #Roja #RojaOnSunTV pic.twitter.com/xdIG7zYQjQ
— Sun TV (@SunTV) May 22, 2021
ரோஜா சீரியல் 9 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக சன் டிவி அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு உறுதி செய்து உள்ளது.அதே போல சுந்தரி சீரியலும் வரும் திங்கட்கிழமை முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ஏன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தரியுடன் இனி வரும் நாளில் இரவு 7 மணிக்கு பயணம்கொள்ள வாருங்கள்
Sundari| From Monday| 7 PM#SunTV #Sundari #SundariOnSunTV pic.twitter.com/GVXx0bB0BB
— Sun TV (@SunTV) May 22, 2021