கொத்மலை நியகங்தொர பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் 26 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொத்மலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அங்கு பணிப் புரிந்த 82 ஊழியர்களுக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 90 பேருக்கு நேற்று பி.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போதே மேற்குறித்த 26 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக கொத்மலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
26 தொற்றாளர்களில் 18 பேர் பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என்பதுடன் மிகுதி 8 பேரும் புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
-க.கிஷாந்தன்-