நோர்வூட் பிரதேச சபையின் மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிரதேச சபை செயலாளர் மற்றும் 7 ஊழியர்களுக்கும் தொற்று உறுதியானதாக பொலவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நோர்வூட் பிரதேச சபை தலைவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 09 பேர் தனிமைப்படுதப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் தொற்று ஏற்படமுன்னர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றமை தெரியவந்துள்ளது.
இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 38 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 10 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.
–க.கிஷாந்தன்-