நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க வேண்டும் என்றும், நம் உடல் தோற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆசை இருக்கும். ஏனென்றால் தோற்றத்தை வைத்து தான் உலகம் ஒருவரை தீர்மானிக்கிறது. அனைவரையும் கவரும் விதமாக தோற்றமளிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் நினைக்கும் போது, ஸ்டைலான ஆடைகளை அணிவது மட்டுமே போதும் என அவர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நாம் அதைவிட அதிகமாக செய்ய வேண்டும்.
கவர்ச்சியாக தோற்றமளிக்க, ஒருவர் அவர்களின் உடல் தோற்றத்தை அதிகரிக்க சில ஆரோக்கியமான பழக்கங்களை அவர்களின் வாழ்க்கைமுறையில் பின்பற்ற வேண்டும். எனவே அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் 5 எளிதான ஊட்டச்சத்து குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
-
தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுங்கள்:
வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது. இது தவிர, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் வறண்டு போகாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதனால் சருமம் மென்மையாகவும் இருக்கும்.
-
சீரான உணவை உட்கொள்ளுங்கள்:
ஓட்ஸ், கொட்டைகள், பயறு போன்ற கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கொண்ட நன்கு சீரான உணவை உண்ணுங்கள். அதே சமயம் சிவப்பு இறைச்சி, பால் பொருட்கள் போன்ற அதிக அளவு கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
-
நல்ல தூக்கத்தைப் பெறுங்கள்:
போதுமான அளவு தூக்கத்தைப் பெறுவது உங்கள் மனநிலையை அதிகரிப்பதோடு கவலை, மனச்சோர்வு போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவும். மேலும் உடலின் அனைத்து உறுப்புகளையும் மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் உடலை ரீசார்ஜ் செய்ய உதவுகிறது. இதனால் அடுத்த நாள் காலையில் நீங்கள் புதியதாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.
-
உடற்பயிற்சி:
ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஜாகிங் போன்றவற்றை நீங்கள் செய்யலாம். உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் தோல் நிறம் மேம்படும் மற்றும் பளபளப்பாக இருப்பீர்கள். தினசரி உடற்பயிற்சி தோல் செல்களை வளர்ப்பதற்கும் தசையை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
-
அதிக அளவு தண்ணீர் குடியுங்கள்:
ஒரு நாளில் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீரைக் குடிக்கவும். இது உங்கள் நீரேற்றமாக வைக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், சூரிய பாதிப்பை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சருமத்தை வளர்க்கவும், ஆற்றலை அதிகரிக்கவும், சோர்வு குறைக்கவும் உதவுகிறது.