விக்ரம்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சத்யன் சூர்யனுக்கு பதிலாக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் வில்லனாக நடிக்க ஏற்கெனவே ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத், சத்யன் சூர்யன் என ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றியவர்களே விக்ரமில் பணியாற்றுகிறார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது ‘அங்காமலே டைரீஸ்’, ‘ஜல்லிக்கட்டு’, தமிழில் விஜய் நடித்த ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் ‘விக்ரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகப் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சத்யன் சூர்யனுக்குத் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், மலையாளத்தில் பிரபலமாகி வரும் இளம் நடிகர் ஆண்டனி வர்கீஸும் ‘விக்ரம்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.