இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும் கடந்த மூன்று வருடங்களாக மன்னாரில் இருந்து பாத யாத்திரை , மற்றும் உண்ண நோன்பை மேற்கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் கிருஸ்ணன் டயஸ் நேற்று புதன் கிழமை (20) இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா சென்ற நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக நேற்று புதன் கிழமை (19) உயிரிழந்துள்ளதாக இந்தியாவில் உள்ள உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஆகிய மூன்று வருடங்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும் பாதயாத்திரை மற்றும் தவம் மேற்கொண்டு வந்தார்.
இறுதியாக இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படையினர் உற்பட அனைவரும் உடல் உள நலம் வேண்டியும் இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டும் பாதயாத்திரை மேற்கொண்டார்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை, மற்றும் மதத்தலைவர்களின் ஆசியுடன் தனது பாத யாத்திரையை ஆரம்பித்தார்.
குறித்த பாதயாத்திரையானது சுமார் 40 நாட்கள் இடம் பெற்றது. நாள் ஒன்றிற்கு சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் வரை பாத யாத்திரிகையை மேற்கொண்டார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து 41 நாட்கள் நிலத்திற்கு சாக்கு விரித்து அனுராதபுரம் வரைக்கும் உருண்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து 2 வது தடவையாக கடந்த ஆண்டு (2020) சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் தீவு நுழைவாயில் பகுதியில் 50 நாட்கள் பேசாமலும் உண்ணாமலும் பிற்பகல் மட்டும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு பசும் பால் அருந்தி தவம் இருந்தவர்.
இந்த நிலையில் 3 வது தடவையாக இவ்வருடம் (2021) மன்னாரில் இருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை ஆரம்பித்திருந்தார். ஜனாதிபதி கோட்டா, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நலம் வேண்டி இந்த பாதயாத்தரையை செய்தார்.
இந்த நிலையிலே அண்மையில் இந்தியா சென்ற நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக அவர் நேற்று உயிரிழந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.