இலங்கை

கொரோனாவிற்கு பயந்து தலைமறைவான நூற்றுக்கணக்கான புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 400 பேர் வரையானவர்களிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் 422 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பரிசோதனைக்கு வராமல் பதுங்கி இருககிறார்கள்.

அவர்களின் விபரங்களின் அடிப்படையில் பதுங்கி இருக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களிலேயே தனிமைப்படுத்தவும், தொடர்ந்து ஒத்துழைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அடகு கடைகளில் குவிந்த மக்கள்!

Pagetamil

யொஹானிக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு!

Pagetamil

இஷாலினிக்கு நீதி கோரி யாழ் நகரில் போராட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!