25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இந்தியா

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: தேமுதிக விளக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் – திருவண்ணாமலையில் ‘அரோகரா’ முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

Pagetamil

48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

Pagetamil

உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுன் கைது: பெண் ரசிகை உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை

Pagetamil

சூப்பர் ஸ்டாருக்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை

east pagetamil

Leave a Comment