கொழும்பில் யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக அமைக்கப்பட்ட தூபியில் நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யுத்த வெற்றியை நினைவுகூர்வதுடன், கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த பகுதியில் கலந்த சில வருடங்களான மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளிற்கு கொரோனாவை காரணம் காண்பித்து, பொலிசார் ஓடியோடி வடக்கில் தடையுத்தரவுகளை பெற்று வரும் நிலையில், கொழும்பில் யுத்த வெற்றி தினத்தில் இந்த நிகழ்வு இடம்பெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனேகமாக நாளை கொண்டாட்டம் இடம்பெறலாமென தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் எதிர்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் நினைவிடத்தில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இராணுவத்தினர் பலர் அங்கு இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 பெரிய கொட்டகைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.