தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை முகத்தில் தடவும்போது சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் மென்மையை கொடுக்கும். மென்மையான மிருதுவான சருமத்தைப் பெற முடியும். இதில் வைட்டமின் F மற்றும் லினோலிக் அமிலமும் (linoleic acid) உள்ளது.
தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லாரிக் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகத்தில் பூஞ்சை மற்றும் அழுக்கை நீக்கும். இந்த லாரிக் அமிலத்தின் ஆற்றல் இரவில் அதிகமாக இருப்பதால் இரவில் தேங்காய் எண்ணெயைப் தடவிக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
கரடுமுரடான, வறண்ட சருமம் இருப்பவர்கள், தேங்காய் எண்ணெயை தவறாமல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் தேய்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மாய்ஸ்சரைசரை விட அதிக நன்மை தேங்காய் எண்ணெய் மூலம் கிடைப்பதை நீங்களே நன்றாக உணருவீர்கள்.
அதுமட்டுமில்லாமல் தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்து கொண்டால் எரிச்சல் நீங்கும் மற்றும் பிளாக்ஹெட்ஸ் இல்லாமல் தெளிவான சருமத்தைப் பெற முடியும்.
தேங்காய் எண்ணெய் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சக்தியையும் கொண்டுள்ளது, எனவே நீங்கள் எப்போதும் இளமையான தோற்றத்தைப் பெற இந்த எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். தோலில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க தேங்காய் எண்ணெய்யை தாராளமாக பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தேய்த்துக்கொண்டால் உடல் சூடு தணியும். எனவே இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தினமும் தேங்காய் எண்ணெயை முகத்திலும் உச்சந்தலையிலும் அளவாக பயன்படுத்துவது நல்லது.