25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
சினிமா

15நாட்கள் தனிமைக்குப் பிறகு குழந்தைகளைக் கட்டியணைத்த அல்லு அர்ஜுன் ; வைரல் வீடியோ!

கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜுன் 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் தன் குழந்தைகளைக் கட்டியணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அல்லு அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெலுங்கு திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று தான் கொரோனாவிலுருந்து மீண்டுவிட்டதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.

“தனிமைப்படுத்தப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு கொரோனாவிலுருந்து மீண்டுள்ளேன். எனக்கு கிடைத்த நல்வாழ்த்துக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் வெளியே வந்த அல்லு அர்ஜுன் தன்னுடைய குழந்தைகளை உற்சாகத்தில் கட்டியணைக்கும் வீடியோ பார்ப்போரது இதயங்களை வென்று வருகிறது. 15 நாட்கள் தனிமையில் இருந்து கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் குடும்பத்தைச் சந்திக்கிறேன். என் குழந்தைகளை மிகவும் மிஸ் செய்தேன்” என்றும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: விஜய் நேரில் வாழ்த்து!

Pagetamil

மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Pagetamil

‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கூறமாட்டேன்’ – நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாத மனு

Pagetamil

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்…” – தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Pagetamil

Leave a Comment