முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு; நினைவுக்கல்லும் களவு: படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின்னர் காட்டுமிராண்டித்தனம்!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ulla நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
நேற்று (12)மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது . இந்த நிலையில் பொலிஸ் இராணுவம் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்ட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் இராணுவ தடை ஏற்படுத்தப்பட்டு உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .
நினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றி செல்லப்பட்டுள்ளதோடு பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளது.
இரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர். உடைக்க பட்டுள்ள நினைவு தூபியை சூழ இராணுவ சப்பாத்து அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...

படப்பிடிப்பாளர்களை தாக்கிய சிஐடியினர் உள்ளிட்ட 4 பேர் கைது!

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட கமரா உள்ளிட்ட பொருட்களை கொண்ட தோல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்