இஸ்ரேலில் அஷ்கெலோன் அருகே ஹமாஸ் குழு நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த தாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவர் இந்தியாவிலுள்ள தனது கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்தபோது. இந்த சம்பவம் நடந்தது.
இடுக்கி, கீரிதோடுவைச் சேர்ந்த 32 வயதான சௌமியா, ஆஷ்லெகோனில் ஒரு பராமரிப்பாளராக பணிபுரிந்த வீட்டிலிருந்து சந்தோஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஹமாஸ் ரொக்கெட் கட்டிடத்தை தாக்கியது
மாலை 5:30 மணிக்கு கணவர் சந்தோஷை வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட சௌமியா-ரொக்கெட் தாக்குதலுகு சில நிமிடங்களுக்கு முன்பு- அந்த இடத்தை சூழ்ந்த பதட்டமான சூழ்நிலையைப் பற்றி தனது கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அழுதுகொண்டிருந்த சௌமியா, வெளியே பதற்றமான சூழல் நிலவுவதாக கணவரிடம் சொன்னார்.
ஒரு வயதான பெண்ணை கவனித்துக்கொண்டிருந்த வீட்டிலுள்ள ஒரு பதுங்கு குழிக்கு பாதுகாப்புதேடி செல்லவுள்ளதாக செமியா அவருக்குத் தெரிவித்தார்.
தன் மனைவியை ஆறுதல்படுத்த முடியாத நிலையில் சந்தோஷ் தவித்துக் கொண்டிருந்த போது, பெரிய வெடிச்சத்தம் கேட்டது.அந்த பகுதியில் புகை மூடியது. திரையில் சௌமியாவைப் பார்க்க முடியவில்லை.
வீடியோ அழைப்பும் வெட்டப்பட்டது. அவர் பல முறை வீடியோ அழைப்பை மேற்கொள்ள முயன்றார். ஆனால் பலனளிக்கவில்லை.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேலில் ஆஷ்லெகோனில் பணிபுரியும் சௌமியாவின் மைத்துனரான ஷெர்லி பென்னி, தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.
சௌமியா பணிபுரிந்த வீட்டு வயதான பெண்மணியும் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக நடக்கும் மிகக் கடுமையான தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 35 பேர் காசாவிலும், இஸ்ரேலில் ஐந்து பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.