கொரோனாவின் இரண்டாவது அலையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதன் தீவிரத்தால் மரணங்கள் உண்டாவதும் அதிகரித்துவருகிறது. கொரொனா அறிகுறிகள் ஒவ்வொன்றாக உருகி கொண்டிருக்கிறது.
தற்போது நாம் கொரோனா தாக்கத்தால் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் மரணங்களையும் அதிகம் சந்தித்துவருகிறோம். கொரோனா தொடர்பான அறிகுறிகள் பட்டியல் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அறிகுறிகள் முன்னேறுவதும் மாறியுள்ளது.
இது கொரோனா நோயாளிகளை ஆரம்ப கட்டத்திலேயே தீவிரப்படுத்திவருகிறது. இது மக்களுக்கு கடுமையான அறிகுறிகளை உண்டாக்கும் வாய்ப்பையும் அதிகரித்து வருகிறது. இது பயத்தை உண்டாக்க செய்யலாம். அப்படியான அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி. இது கொரோனா -19. சொல்லப்பட்ட அறிகுறியாக இல்லை என்றாலும் தீவிரமாகும் போது பலவீனமடைகிறது. அப்போது உதவி தேவைப்படலாம்.
கொரோனாவுக்கு மார்பு வலி அறிகுறியா
கொரோனா அறிகுறிகள் தனித்து சொல்லப்படுவதில்லை. பல விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் வெளிப்படும். அப்படியான அறிகுறிகளில் மார்பு வலியும் தற்போது கவனத்தில் எடுக்கப்படுகிறது. இதுவும் பொதுவான அறிகுறியாக சொல்லப்படுகிறது.
இது ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தில் கொரோனா வைரஸால் அறிகுறிகள் வெளிபடும் போது உடல் பாதிக்கும் போது மார்பு வலியும் உண்டாகலாம். கொரோனா ஏன் மார்புவலியை உண்டாக்குகிறது என்று பார்க்கலாம்.
மார்பு வலி வந்தால் கொரோனா என்று நினைக்க வேண்டாம். மார்பு வலி, மார்பில் ஒரு விதமான அசெளகரியம் போன்றவை கொரோனா அறிகுறியாக இருக்காது. ஆனால் தற்போது பெரும்பாலான அறிகுறிகள் கொரோனாவால் உண்டாகிறது.
ஒருவர் அனுபவிக்கும் இந்த வலியின் தீவிரம் மற்றும் வகையை பொறுத்தவரை அது கூர்மையானதாகவும், வேதனையை அதிகப்படுத்தும். மோசமான வலியை உண்டாக்க கூடும். சில சமயங்கலில் சுவாசத்தில் பிரச்சனையை உண்டாக்கும்.
அதோடு கொரோனா வைரஸால் உண்டாகும் மார்பு வலி மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளின் விளைவாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வலி தனியாக ஏற்படாது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியானால் மார்பு வலியை உணரும் போது கவனமாக சரிபார்க்க வேண்டும்.
கடினமான வறட்டு இருமல் இருக்கும் போது
கடினமான வறட்டு இருமல் என்பது அனைத்துவிதமான கொரோனா வைரஸ் நிகழ்வுகளிலும் பொதுவான அறிகுறியாகும். கொரோனா இருமல் ஒருவரை வித்தியாசமாக பாதிக்க செய்யும்.
தொடர்ந்து இருமல், காலம் மற்றும் தீவிரமான நிலை கடுமையான இருமல் கூட மார்பு வலியை உண்டாக்கும். முதல் முறையாக இருமல் அதிகரிக்கும் போது சுவாசத்திற்கு தடங்கலை உண்டாக்கும்.
அப்போது விலா எலும்புகள் மற்றும் மார்பு துவாரங்களுக்கு அருகில் உள்ள தசைகளில் முறிவை உண்டாக்கும். தொடர் உலர்வான இருமல் கடுமையான அசெளகரியத்தை உண்டாக்கும்.
நிமோனியா பாதிப்பு இருக்கும் போது
கொரோனா நிமோனியா தீவிரமான கொரோனா சிக்கலாக இருக்கலாம். நிமோனியா என்பது நுரையீரலுக்கு இருக்கும் காற்றுப்பைகளில் ஏற்படும் அழற்சியால் உண்டாகும் சிக்கலாக இருக்கலாம். இந்த சிக்கலானது நெஞ்சுகுழிக்குள் திரவத்தை உருவாக்க வழிவகுக்கும்.
நுரையீரலை பாதிக்கும் போது
இரண்டாவது கொரோனா அலை தொற்றின் போது நுரையீரல் தொற்று நோய்கள் அதிகரித்து வருகின்றன. 30% க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் ஒரு வகையான தொற்று அல்லது குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
நுரையீரல் வீக்கத்தின் இலேசான நிலையிலும் மார்பு துவாரங்களில் அசெளகரியத்தையும் வலியையும் உணர்வீர்கள். இந்த நிலையில் நுரையீரல் ஈடுபாட்டின் அளவை கவனிக்க மார்பு எக்ஸ்-ரே அல்லது சி.டி.ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
இதய கோளாறு கொண்டிருப்பவர்களுக்கு
உங்களுக்கு ஏற்கனவே இதய நோய் கோளாறு பாதிப்பு இருந்தால் அல்லது கரோனரி தமனி நோய் அபாயத்தில் இருந்தால் நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிகுறிகளை கவனிக்க வேண்டும். மார்பு வலி பெரும்பாலும் இதய நிலைகளின் அறிகுறியாக செயல்படக்கூடும்.
கொரோனா இரத்தத்தின் மூலம் பரவும் போது
உடலில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாம் அறிவோம். கொரோனா வைரஸ் தொடர்ந்து இரத்த ஓட்டத்தில் பரவும் போது இது நுரையீரல் அடைப்பை ஏற்படுத்தகூடும். இதனால் இரத்த உறைவு உடைந்து நுரையீரலுக்கு பரவும் போது மார்பில் ஆழ்ந்த வலியை உண்டாக்குகிறது.