சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் கேப்ரியல்லா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரை பற்றி ஒரு வதந்தி பரவி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் கேப்ரியல்லா. அவர் இதற்குமுன் நயன்தாராவின் ஐரா படத்தில் நடித்து இருந்தார். தற்போது சுந்தரி சீரியல் மட்டுமின்றி ஒரு திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து முடித்திருக்கிறார். N4 என்ற அந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
பொதுவாக நடிகைகள் வெள்ளையாக இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கருப்பாக இருப்பதையே அவரது பாசிட்டிவ் ஆக மாற்றி சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜொலித்து வருகிறார் கேப்ரியல்லா.
கேப்ரியல்லா சமீபத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அதில் இருந்து குணமாகி வரும் நிலையில் youtubeல் சிலர் இவர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதை பார்த்து கோபமான அவர் இன்ஸ்டாகிராமில் screenshot எடுத்து பதிவிட்டு உள்ளார்.
“நான் நல்லா தான் இருக்கும். டைட்டில் பாரு உயிருக்கு போராடறாங்களாம். Am Good உடம்பு சரி ஆகிட்டு இருக்கு” என கேப்ரியல்லா தெரிவித்து உள்ளார்.