இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது. இதனால் ஆங்காங்கே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அதிகமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1