Site icon Pagetamil

இந்தியாவில் நேற்றும் 4 இலட்சத்திற்கும் அதிகமானவர்களிற்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 3 லட்சத்து 86 ஆயிரத்து 444 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 17 ஆயிரத்து 404 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று மட்டும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 92 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 362 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 37 லட்சத்து 36 ஆயிரத்து 648 பேர் வைரஸ் பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 16 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 663 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version