நாட்டில் 5 மாவட்டங்களில் மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின், கொடிகாமம் பொலிஸ் பிரிவில் – கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்,
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவில்- கெரவலப்பிட்டிய, வத்தளை, ஹேக்கித்த, பள்ளியாவத்தை தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்,
மாபாகே பொலிஸ் பிரிவில்- கெரங்கபொக்குன, கலஉடுபிட்ட, மத்துமகல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டன.
களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில்- நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜித மாவத்தை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில்- வித்யாசார கிராம சேவகர் பிரிவிலுள்ள போசிறிபுர பகுதியும் மஹா வஸ்கடுவ வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மத்துகம பொலிஸ் பிரிவில் யட்டதொலுவத்தை மேற்கு கிராம சேவகர் பிரிவின் கொரட்டுஹேன கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிவன்திடிய மற்றும் மாம்பே கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டன.
காலி மாவட்டத்தின் ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்கல 1, கொக்கல 2, மீகஹகொட, மலியகொட மற்றும் பியதிகம மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.