உணவிற்கும், விதை நெல்லிற்கும் சிறுபோகம் விதைப்பதற்கு அனுமதிக்கவில்லையெனில் அரச அதிகாரிகளிற்கெதிராக போராட்டத்தில் குதிப்போம் என புதுஐயங்குளம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
9 விவசாயிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற குறிதத் ஊடகவியலாளர் சந்திப்பில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும், பாதிப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை தெளிவு படுத்தினர்.
இதன்போது அவர்கள் தெரிவிக்கையில்,
புதியஐயங்குளத்தில் 35 வருடங்களிற்கு மேலாக நாங்கள் விவசாயம் செய்து வருகின்றோம். குறித்த பகுதியில் நீர்பாசனத்திற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால்கள் மூடப்பட்டு புதிய வாய்க்கால்களை எமது காணிகளை ஊடறுத்து அமைக்க தற்புாது முயற்சிக்கின்றனர். ஏற்கனவே இருந்த வாய்க்கால்கள் அனைத்தையும் மண் புாட்டு மூடி, அவ்வாறானதாரு இடமே இல்லை என்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
புதிய வாய்க்கால் அமைப்பதற்கு அனுமதித்தால்தான் சிறுபுாகத்திற்கு நீர் தருவோம் என கூறினர். நாம் ஏற்கனவே இருந்த வாய்க்கால்கள் மூலம் சிறுபோகத்திற்கு நீரை பாய்ச்ச முடியும் என தெரிவித்தோம். ஆனால் இன்று சிறுபோக செய்கையை கமக்கார அமைப்பினரே மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கமநலசேவைகள் திணைக்கள ஆணையாளரு்ககு அறிவித்தோம். அவர்கள் வந்து பார்வையிட்டு 80ம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு வீதி மற்றம் வாய்க்கால்கள் இருந்ததோ அதே போன்று அமைக்க கூறினார். அதனை கண்டும் காணாமல் விட்டுள்ளனர். ஒரு ஏக்கர் காணியில் இரு பக்கமும் வீதிக்கு எடுத்துக்கொண்டால் நாம் எவ்வாறு விவசாயம் செய்வது?
இப்போது சிறுபோகத்தையும் நிறுத்தியுள்ளனர். அதனால் பெரிய பாதிப்பினை நாங்கள் எதிர்கொள்ளப்போகின்றோம். உணவுக்கு எங்களிடம் நெல் இல்லை. விதைப்பதற்கு நெல்லை வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை. ஒரு ஏக்கர் காணியில் மேற்கொள்ளப்படும் செய்கையில் நாங்கள் எவ்வாறு ஜீவிப்பது? அதிகாரிகள் அனைவரும் இதற்கு நல்லதொரு முடிவு எடுக்காவிடின் நாங்கள் அதிகாரிகளிற்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
தற்போது கமக்கார அமைப்பில் உள்ள தலைவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர். அவரை தொடர்ந்தும் அமைப்பில் இருக்க கூடாது என கொழும்பில் உள்ள கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகமே அறிவுறுத்தியிருந்தார். அதற்கான ஆவணங்கள் எமது கைகளில் உள்ளது.
தைமாதம் மாசி மாாதமளவில் காலபோக செய்கைக்கான அறுவடை முடிந்தது. மூன்றாவது மாதம் சிறுபோகம் கட்டாயமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். புதிய பாதைக்கு இடமளித்தால்தான் சிறுபோகம் தருவோம் என காலம் தாழ்த்தியதால் குளத்திலிருந்து நீர் வெளியேறியுள்ளது. அக்குளத்திலிருந்து நாள் ஒன்று்கு 4 அங்குலம் வரை நீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.
குளத்து கரையிலிருந்து மண்ணைஅகற்றி அந்த பகுதியை தாழ்வு நில பகுதியாக்கியுள்ளனர். அதனால் குளத்தின் கட்டு பலவீனமடைந்து நீர் கசிவு அதிகரித்துள்ளது. குறித்த சட்டவிரோத காணிக்கான ஆவணங்களை வழங்கவும் கமநலசேவைகள் திணைக்களம் சிபாரிசு செய்துள்ளது.
குளத்தின் கீழ் உள்ள செய்கை நில பகுதி 80 ஏக்கரே ஆகும். அவ்வாறு 80 ஏக்கர் என பதிவு செய்துவிட்டு மானிய பசளையை பெற்றுக்கொள்வதற்கு 136 ஏக்கர்வரை பதிவு செய்கின்றனர். வாய்க்கால் இல்லாத காணிகள் மற்றும் சிறுபோக செய்கைக்கு உட்படுத்தப்படாத காணிகளையும் சிறுபோக செய்கைக்குள் கொண்டு வருகின்றனர்.
இப்பொழுதுள்ள கமக்கார அமைப்பின் செயலாளருக்கும் மானாவாரி காணியே உள்ளது. அதனை சிறுபோக காணிக்குள் கொண்டு வருவதற்காகவே இவ்வாறானதொரு புதிய பாதை அமைப்புக்காக முயல்கின்றனர். அதற்கான ஆதாரங்களும் உண்டு. குறித்த குளத்தின் கீழ் 80 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அதனை 13,14 பேர் பங்குகளை சேகரித்து விதைக்கின்றனர். காலபோகத்தில் 1 ஏக்கர் உர மானியம் பெற்றவர், சிறுபோகத்தில் 3 பங்கு பெற்றுக்கொள்கின்றார். இதிலிருந்து பல ஊழல்கள் உள்ளமை வெளிப்படையாகின்றது. அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது.
சிறுபோக செய்கையை கேமக்கார அமைப்பே மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை கமநலசேவைகள் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தரு்ம, கமக்கார அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும் மாத்திரமே எடுத்தார்கள். அத்தீர்மானம் எடுக்கப்படுகின்றபோது முக்கியமான அதிகாரிகளோ அல்லது விவசாயிகளோ அங்கு இருக்கவில்லை. குறித்த கூட்டத்தில் சிறுபோ பங்குரிமையாளர்களான 80 பேரில் மிக குறைந்தளவானோரே கலந்து கொண்டனர்.
விதைக்க விரும்பும் விவசாயிகளிற்கு சிறுபோக பங்கை கொடுத்துவிட்டு விதைக்காதவர்களின் பங்கை கமக்கார அமைப்பு பெற்றுக்கொண்டிருந்தால் அதில் நியாயத்தன்மை உள்ளது. ஒட்டுமொத்தமாக விவசாயிகளிற்கு கொடுக்காது விடுவதில் எந்தவித நியாயப்பாடுகளும் கிடையாது. ஒரு ஏக்கர் செய்கையில் அழிவுகள், நோய்த்தாங்கங்கள் போக 15 மூடைகள் மாத்திரமே கிடைக்கும். அதில்தான் நாங்கள் உணவாகவும், அடுத்த செய்கைக்கான விதை நெல்லாகவும் பயன்படுத்துகின்றோம்.
அடைக்கப்பட்ட நீர்வினியோக பாதைகளை அகற்றுமாறு கிளிநொச்சி பெரும்பாக உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனை அவர் நடைமுறைப்படுத்தவில்லை. ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கப்பட்ட தற்போதுள்ள தலைவைரை நீக்கிவிட்டு உரமானிய பட்டியலில் பிரதான நபராக அவரையே காண்பிக்கின்றனர். அவர்மீது பாரிய உரமானிய ஊழல் குற்றச்சாட்டும் உள்ளது.
செய்கை மேற்கொள்ளதாக சிலருக்கு மானிய உரம் வழங்கப்பட்டமை தொடர்பில் எழுத்துமூலமாக பெரும்பாக உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியும் அவர் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். குளத்தின் கீழ் சட்டவிரோதமாக விதைக்கப்பட்ட காணிகளிற்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குளத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பால்தான் விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம். குளத்திற்கு அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள செய்கை காணிகளிற்கும் இன்று அனுமதிப்பத்திரம் வழங்க கமநல சேவைகள் திணைக்களம் சிபாரிசு செய்துள்ளது.
தற்போது உள்ள தலைவர், அயல்காணியையும் ஆக்கிரமித்துள்ள நிலையில் அதனை பிரித்து காண்பிக்கும் நோக்குடன் புதிதாக வீதியையும் வாய்க்காலையும் காண்பிக்க முற்பட்டுள்ளார் எனவும் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
குளத்திலிருந்து வெளியுறும் கழிவுநீரை பயன்படுத்தி செய்கை மேற்கொள்வதற்கு நாங்கள் முயற்சி எடுத்தோம். அதனை கமக்குழு பிடுங்கி எறிந்தனர். செய்கை மேற்கொள்ளப்படாமையால் நாங்கள் பெரும் கஸ்டத்துக்குள்ளாகியுள்ளோம்.
எமது காணி சிறிய காணித்துண்டு. அதன் ஊடாக வீதியையும், வாய்க்காலையும் அமைப்பதற்கு முயற்சிக்கம் தரப்பினர் 10 ஏக்கர் வரை காணி வைத்திருப்பவர்கள். சிறிய காணியில் எமது உணவுக்குகாக செய்கை மேற்கொள்ளம் நாமே பாதிக்கப்புாகின்றோம்.
இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து கள விஜயம் மேற்கொண்டு எமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்று தாருங்கள். அவ்வாறில்லையேல் நாங்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்போம்.
சிறுபோக செய்கையை மேற்கொள்ள விரும்பும் எமக்கு செய்கைக்கான அனுமதியை தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் அவ்வந்த அதிகாரிகளிற்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்க தள்ளப்படுவோம் எனவும் விவசாயிகள் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.