27.3 C
Jaffna
November 9, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

டேப்லெட்ல இப்படி ஒரு வசதியா? வாயைப் பிளக்க வைக்கும் லெனோவா!

கேமிங் போன்கள், லேப்டாப் போன்றவைக்கு லெனோவா மிகவும் பெயர்பெற்ற ஒரு பிராண்ட். பிரபலமான லெனோவா பிராண்ட் புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் சாதனம் ஒன்றை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் இதுவரை பார்த்த பெரும்பாலான லேப்டாப்களில் HDMI ஆதரவு இருக்காது.

ஆனால், இப்போது வரவிருக்கும் லேப்டாப்பில் HDMI உள்ளீட்டிற்கான ஆதரவு இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. லெனோவா நிறுவனம் ஒரு பிரத்யேக HDMI Input போர்ட் கொண்ட ஒரு டேப்லெட் சாதனத்திற்கான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. நிண்டெண்டோ சுவிட்சிற்கான பெரிய திரையை இந்த சாதனம் தெளிவாகப் பயன்படுத்தப்படுவதாக முன்னோட்டத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகை Lenovo Yoga எனும் கணக்கிலிருந்து வெளியாகியுள்ளது. எனவே இது Lenovo Yoga வரிசையில் ஒரு புதிய சாதனம் ஆக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கு முன்பு தகவல்கள் கசிந்த அதே “Yoga X” சாதனம் ஆகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

HDMI வெளியீட்டைக் கொண்ட சில டேப்லெட்டுகள் உள்ளன, ஆனால் HDMI Input கொண்ட ஆண்ட்ராய்டு டேப்லெட் என்பது இதுவரை கேள்விப்படாதது. இதுபோன்ற மற்றொரு உயர்நிலை ஆண்ட்ராய்டு டேப்லெட்டிலும் நிறுவனம் செயல்படுவதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

லெனோவா நோட்புக் தயாரிப்பு மேலாளர் லின் லின் வரவிருக்கும் லெனோவா டேப்லெட்டின் ‘Settings’ பக்க ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இந்த தயாரிப்பின் சில முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது. அதன்படி டேப்லெட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC உடன் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டு ZUI 12.5 உடன் இயங்கும். இது ‘Lenovo One’ அம்சத்திற்கான ஆதரவைக் கொண்டிருக்கும், இது ஹவாய் நிறுவனத்தின் Multi Screen Collaboration மற்றும் சியோமி Device Control அம்சங்களையும் கொண்டிருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment