வடமாகாணத்தில் இன்று (6) 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 707 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் 20 பேர், முல்லைத்தீவு மாவட்டம் ஒருவர், கிளிநொச்சி மாவட்டம் 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேர், தெல்லிப்பளை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் (இவர்கள் தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள்), சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் ( 2 பேர் முதல்நிலை தொடர்பாளர்கள், 2 பேர் வீதி திருத்த பணியாளர்கள்) தொற்றிற்குள்ளாகினர்.
கிளிநொச்சி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்து சென்ற ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் யாழ் மாவட்டத்தில் மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளன. யாழ் நகர் பகுதியை சேர்ந்த 77 வயதான ஒருவரும், இளவாலையை சேர்ந்த 75 வயதான பெண்ணும் நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் இதுவரை 21 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. வட மாகாணத்தில் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன.