5மாவட்டங்களின் 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பகுதிகள்- நேற்று சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட- நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள இஞ்சஸ்ட்ரீ கிராமசேவகர் பிரிவு, ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவில் எல்தெனிய தேவாலய வீதி, ரணவிரு தர்மசிறி மாவத்தை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கங்குல்விட்டிய கிராமசேவகர் பிரிவு, பொத்துபிட்டிய வடக்கு, கலவான- ஹப்புக்கொட கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பொலிஸ் பிரிவிலுள்ள வில்லோரவத்தை கிராமசேவகர் பிரிவு
களுத்துறை மாவட்டத்தில் வொம்புவெல்ல கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது.