புற்று நோயை ஏற்படுத்த கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் தொடர்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
என் ஜோய் வர்த்தக நாமத்தை கொண்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் மூலக்கூறுகள் இருப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் குறித்த எண்ணெய் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும் அவ்வாறு தொடர்சியாக விற்பனை மேற்கொள்ளும் பட்சத்தில் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உட்பட விற்பனை முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களும் தேங்காய் எண்ணெய் கொள்வனவில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1