இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எதிரிகளாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்றைய லீக் போட்டியில் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் நாதன் கூல்டர் நைலுக்கு பதிலாக ஜேம்ஸ் நீசம் இடம் பிடித்தார். ஜெயந்த் யாதவிற்கு பதில் தவால் குல்கர்னி அணியில் சேர்க்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது.
ராயுடு அபாரம்
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மொயின் அலி (58) டூபிளசி (50) மற்றும் ராயுடு 20 பந்தில் அரைசதம் கடந்தார் அசத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. ராயுடு (72) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
நல்ல துவக்கம்
இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, டி காக் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. இருவரும் சென்னை பவுலர்களின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இருவரும் தலா 4 பவுண்டரிகள், தலா 1 சிக்சர் அடிக்க, மும்பை அணி 7 ஓவரில் 68 ரன்கள் என்ற நிலையை எட்டியது.
WHAT. A. WIN for the @mipaltan 🔥🔥
Some serious hitting from @KieronPollard55 ( 87* off 34) as #MumbaiIndians win by 4 wickets.
Scorecard – https://t.co/NQjEDM2zGX #VIVOIPL pic.twitter.com/UAb6SYCMQz
— IndianPremierLeague (@IPL) May 1, 2021
போலார்டு மிரட்டல்
இதற்கிடையில் ரோகித் சர்மா 35 ரன்களிலும், குயிண்டன் டி காக் 38 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (2), குர்னால் பாண்டியா (32) நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சூறாவளியாக அதிரடி காட்டிய போலார்டு 17 பந்தில் அரைசதம் கடந்து இந்தாண்டு ஐபிஎல் அரங்கில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார்.
பின் வந்த ஹர்திக் பாண்டியா (16), நீசம் (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இந்நிலையில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 தேவை என்ற நிலையில் போலார்டு 2 பவுண்டரி, 1 சிக்சர் பறக்கவிட மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.