கடந்த 2019 – ஆம் வருடம் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு செம்ம Loss.
தற்போது RRR படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. அதில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். சுமார் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் ராம் சரணின் மனைவி ஒரு பிரபல யு டியூப் கலந்து கொண்டு அளித்த பேட்டியில்,
ராம் சரணுக்கு அஜித் என்றாலும் , அஜித்தின் படங்கள் என்றாலும் ரொம்ப பிடிக்குமாம். தவிர, ராமிற்கு மட்டுமல்ல தெலுகு மக்கள் மத்தியிலும் அஜித்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறியுள்ளார். கூடிய சீக்கிரம் ராம் சரணும் அஜித்தும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் வேண்டும் இருவரது ரசிகர்களும் ஆசைப்படுகின்றனர்.