25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
விளையாட்டு

ஹொட்டலில் மதுபோதையில் யுவதியுடன் அத்துமீறி நையப்புடைக்கப்பட்ட சம்பவம்: தனுஷ்க குணதிலகவிற்கு ஒரு வருட உளவியல் ஆலோசனை!

புதுவருட தினத்தில் ஹொட்டல் ஒன்றில் யுவதியொருவருடன் அத்துமீறி நடக்க முற்பட்ட நிலையில், நையப்புடைக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு செல்ல வெட்கத்தில் சிங்கள பாரம்பரிய சிகிச்சை பெறும் கிரிக்கெட் வீரர் பற்றிய செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இதன் தொடர்ச்சியாக, கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். சம்பவத்தில் தான் தொடர்புபடவில்லையென தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் பரிந்துரைக்கும் வைத்தியரிடம் ஒரு வருடத்திற்கு கட்டாய ஆலோசனை பெற தனுஷ்க குணதிலகவை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழு நடத்திய விசாரணையில், ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரரின் தரத்துடன் குணதிலக நடந்து கொள்ளவில்லையென்பதை கண்டறிந்தது.

குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்,
நியாயமான விளையாட்டு, மற்றும் விளையாட்டுத்திறன் இலங்கை கிரிக்கெட்டுக்கு அவதூறு விளைவிக்கும். நேர்மை, ஒழுக்கநெறி ஆகியவற்றின் தரங்களை மீறும் எந்தவொரு நடத்தையிலும் ஈடுபட வேண்டாம் என்று இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு வீரரை எச்சரித்தது.

இலங்கை கிரிக்கெட் பரிந்துரைக்கும் வைத்தியரிடம் ஒரு வருடத்திற்கு கட்டாய ஆலோசனை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ஹாரி புரூக்

Pagetamil

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம்

Pagetamil

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை இரண்டரை நாட்களில் முடித்த அவுஸ்திரேலியா வெற்றி!

Pagetamil

கஸ் அட்கின்சன் ஹட்ரிக் சாதனை: சரண் அடைந்த நியூஸிலாந்து அணி!

Pagetamil

வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்த ‘1983 உலகக் கோப்பை’ வெற்றி நாயகர்கள்!

Pagetamil

Leave a Comment