கிளிநொச்சியில் 2 சைவ உணவகங்களிற்கு தண்டம்!

Date:

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இரண்டு சைவ உணவகங்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை மீறிய காரணத்தினால் அவர்கள் மீது சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (23) கிளிநொச்சி நகரில் இருந்த உணவகங்களில் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இதன் போது இரண்டு சைவ உணவகங்கள் கொவிட் 19 சுகாதார
நடைமுறைகளை பின்பற்றாது வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டமை அவதானிக்கப்பட்ட நிலையில் சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

ஆனால் குறித்த உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்ததோடு, அவர்களின் கடமைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக கரைச்சி பிரதேச சுகாதார பிரிவினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஒரு உணவகத்திற்கு 30 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு, உணவகத்தை பூட்டி சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சீரமைத்த பின்னர் பொதுச்
சுகாதார பரிசோதகர்களின் அறிக்கையினை சமர்பித்து திறக்குமாறும், மற்றொரு உணவகத்திற்கு 16 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது என கரைச்சி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்